#BreakingNews: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின! மாணவர்களுக்கு அதிகாரிகளின் அறிவுறுத்தல்?

0
127

சற்றுமுன் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.இதில் சுமார் 4.7 லட்சம் மாணவர்களும், சுமார் 4.5 லட்சம் மாணவியர்களும் மொத்தமாக 9.5 லட்சம் பத்தாம் வகுப்பு மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இன்னும் தங்களது தேர்வு முடிவுகளை பார்க்காமல் இருக்கும் மாணவர்கள் www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களின் வாயிலாக மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும் பொது தேர்வு எழுதாமலேயே அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டதால் இனிவரும் காலங்களில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களது உயர்கல்விக்காக அடுத்த கட்டத்திற்கு செல்லும் பொழுது, தங்களது கல்வி திறன்களை மேலும் வளர்த்துக் கொள்ளுமாறு தமிழக கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Previous articleபள்ளிகளுக்கு முககவசம் அணிந்து வர வேண்டும்
Next articleசாத்தான்குளம் லாக்-அப் கொலையில் கைதான எஸ்ஐ பலி! வழக்கில் புதிய திருப்பம்