மூணாறு போன்று கொடைக்கானலிலும் நிலச்சரிவா?

0
118

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் வணிக நோக்கத்தால் பல விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு கான்கிரீட்
கூரையாக மாற்றமடைந்துள்ளன.மேலும்
மக்கள் தொகை அதிகரித்ததால்
தகுதியில்லாத இடங்களில் கூட வீடு கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும் அங்கு மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க தண்ணீருக்காக மலையின் மீது போர்வெல் போடப்படுகின்றது. இதனால் பாறைகள் நகர்ந்து மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

மேலும் இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ரவிக்குமார் கூறுகையில், கொடைக்கானலில் கீழ்க்கண்ட பகுதிகளெல்லாம் கார்மேல்புரம், தந்திமேடு, ஆனந்தகிரி, பாத்திமா குருசரடி, எம்.எம்., தெரு, புதுக்காடு, பெருமாள்மலை, வடகவுஞ்சி பகுதிகள், ஏற்கனவே புவியியல் வல்லுனர்களால் பேரிடர் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளன.இதற்கு சிறந்த உதாரணமாக கடந்த 2018ம் ஆண்டு கஜா புயலால் ஏற்பட்ட மண்சரிவை கூறலாம்.இது மட்டுமன்றி நீர் ஓடை பகுதியில் கட்டுமானம் வேலை செய்த 4 தொழிலாளிகள் உயிரிழந்தனர்.கன மழை நேரத்தில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட நேரிடுகின்றது இதுபோன்று கொடைக்கானலில் ஏற்பட்ட பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

மேலும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ரவிக்குமார் அவர்கள் கூறுகையில் கொடைக்கானலில் நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் கட்டுமானங்கள் அதிகரித்துள்ளது. இதனால், கன மழை காலங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. 2017ல், 20 செ.மீ., மழைக்கே பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டடுள்து.
மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவு போல கொடைக்கானலில் ஏற்பட்டு விடக்கூடாது.ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி, அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டுமென்று அவர் தரப்பு கோரிக்கையை முன்வைத்தார்.

இதற்கு வானியியற்பில் விஞ்ஞானி செல்வேந்திரன் கூறுகையில் ஊட்டி, மூணாறு பகுதிகளில் மண் பரப்பு அதிகம் உள்ளதால் நிலச்சரிவு ஏற்படுகிறது. ஆனால் கொடைக்கானல் பகுதி மண் மற்றும் கடினமான பாறைகளால் சூழ்ந்தது. ஆகையால் இங்கு அபாய நிலை உள்ளதாக தெரியவில்லை.இருந்த பொழுதிலும் மழைக்காலங்களில் ஆபத்துக்கள் ஏற்படாதவாறு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Previous articleதனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட சிஆர்பிஎஃப் வீரர்! என்ன காரணம்?
Next articleகணுக்கால் காயத்தைத் தொடர்ந்து அட்லாண்டாவுடன் சாம்பியன்ஸ் லீக் மோதலில் பி.எஸ்.ஜி.க்காக விளையாட எம்பாப்பே தயாராக உள்ளார், துச்செல் உறுதி