கொரோனாத் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல், பள்ளி கல்லூரிகள்,மற்றும் பல்கலைக்கழகங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் முடக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி பொது தேர்வுகளும்,கல்லூரி இறுதி ஆண்டு தேர்வை தவிர்த்து மற்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் டெல்லி,மகாராஷ்டிராவின் கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.ஆனால் செப்டம்பரில் தேர்வு நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)உத்தரவிடப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து யுவனா மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுக்கள் அனைத்தும் ஒன்றாக சேர்த்து நீதிபதி அசோக் பிஷன் தலைமையில் நேற்று விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையின்போது பல்கலைகழக மானியக் குழு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும்,மாணவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியும், யுவனா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் முன் ஆஜரானார்.
அப்பொழுது யூஜிசி தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்,யூஜிசி உத்தரவுகளை மீறி கல்லூரி தேர்வுகளை மாநில அரசுகள் ரத்து செய்ய முடியாது இறுதியாண்டு தேர்வு குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை. செப்டம்பர் மாதத்துக்குள் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று உறுதியாக உள்ளோமென்று யுஜிசி தரப்பில் வாதிடப்பட்டது.
மாணவர்கள் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்,தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது இந்நிலையில் மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வுகளை எப்படி நடத்த முடியும் என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வருகின்ற ஆகஸ்ட் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.