தமிழகத்தில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2020-2021 கல்வியாண்டிற்கான கூட்டுறவு மேலாண்மை முழுநேர பட்டயப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை வரவேற்கப்படுகிறது.இதைப் பற்றி முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
* +2 வகுப்பில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* கட்டாயம் 17 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.1.7.2020 தேதிற்குள் பதினேழு வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
* கல்வி கட்டணம் 14850 வரை வசூலிக்கப்படும். ( முழு நேரப் பயிற்சி)
பயிற்சித் திட்டங்கள் :
இந்த கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி 36 வாரங்கள் கொண்ட பயிற்சி வகுப்பாகும்.பயிற்சிகள் தமிழில் வழங்கப்படும்.இறுதி தேர்வினை கட்டாயம் தமிழில் எழுத வேண்டும்.
நகை மதிப்பீடு மற்றும் அதன் நுட்பங்களை காண பயிற்சிகளும் கணினி மேலாண்மை பயிற்சிகளும் வழங்கப்பட்ட அவற்றிற்கான சான்றிதழ்களும் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் மூலம் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆகஸ்ட் 16 தேதி முதல் இணையத்தில் இந்த பயிற்சிக்கான விண்ணப்ப படிவம் கிடைக்கப்பெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.8.2020-15.9.2020 (மாலை 5.30)
இணையதளமுகவரி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தங்கள் மாவட்டத்தில் உள்ள மேலாண்மை நிலைய முகவரிக்கு கொரியர் அல்லது பதிவுத் தபால் மூலம் மட்டுமே அனுப்பவேண்டும். விண்ணப்பங்கள் நேரில் பெற்றுக்கொளளப்படாது.
மாதிரி படிவங்கள்: