ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு:! ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா?

0
108

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு:! ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா

கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான பல்வேறு போராட்டங்கள் நடந்தன இதில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தை அடுத்து 2018 ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.இதனை எதிர்த்து செர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம்,ஆலையை திறக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அதே நேரத்தில் இந்த ஆலையை திறக்க கூடாது என்று வலியுறுத்தி பல அரசியல் கட்சி பிரமுகர்களும் எதிர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கானது கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்பு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கானது இன்று,நீதிபதிகள்,சிவஞானம் பவானி சுப்பராயன் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வருவதாக சென்னை உயர்நீதிமன்றம். தெரிவித்துள்ளது