கடனில் சிக்கி தவிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் 20,000 கோடி கடன் பெறுவதற்கு மத்திய அரசின் இலவச மின்சார ரத்து நிபந்தனைகளை பின்பற்றுமா தமிழக அரசு?
இந்தியாவைப் பொருத்தமட்டில் மின்சாரம் வாங்கிய கடனில் ராஜஸ்தான் முதலிடமும், தமிழ்நாடு இரண்டாம் இடமும் வகிக்கின்றது.இதுவரையில் மின்சாரம் வாங்கியதில் பல்வேறு வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் ராஜஸ்தான்
ரூ. 35,156 கோடியும்,தமிழ்நாடு
18,068 கோடியும் கடன் வாங்கியுள்ளது.
கொரோனா காலத்தில் 90,000 கோடி மின்சார கடன் இந்திய மாநிலங்களுக்கு வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அண்மையில் கூறியிருந்தார்.ஆனால் கடன் பெறும் மாநிலங்கள் மத்திய அமைச்சகம் சொல்லும் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தது.அந்த நிபந்தனைகள் என்னவென்றால் கடன் பெறும் அனைத்து மாநிலங்களும், மாநிலங்களின் அனைத்து மின்சார வாரியம் தனியார் மயமாக்க படவேண்டும்,மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும்,மேலும் மின்சாரத்தை வீணாக்குவது மின்சார திருட்டு போன்றவற்றிற்கு மின் விநியோகிஸ்தர்கள் பதில் கூறியாக வேண்டும் போன்ற நிபந்தனைகளை மத்திய அரசு விதித்திருந்தது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் ரு 673 கோடி அளவிற்கு கடன் கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்து உள்ளது.ஆனால் இந்த நிபந்தனைகளை பின்பற்றுவதில் சிக்கல்கள் இருப்பதால்,கடன் கேட்டு விண்ணப்பித்த மாநிலங்களும் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில்,தமிழக அரசு 20,000 கோடி மின்சார கடன் கேட்டு உள்ளது.தமிழக அரசு கேட்ட 20 ஆயிரம் கோடி கடன் தருவதாக மத்திய எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங் ஒப்புதல் அளித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.ஆனால் மின்சார கடன் பெற வேண்டுமென்றால் மத்திய அரசு நிபந்தனைகளை பின்பற்றியே ஆக வேண்டும்.தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் தமிழக முதல்வர் அவர்கள் விவசாயிகளுக்கு கட்டாயமான இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.இந்நிலையில் 20000 கோடிக்கு கடனுகாக மத்திய அரசின் நிபந்தனைகளை பின்பற்றுவாரா? அல்லது விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை தடையின்றி வழங்குவாரா? என்ற குழப்பம் மக்களிடையே நிலவி வருகின்றது.