செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் பொது போக்குவரத்து இயங்கும்:! தமிழக அரசு!

0
92

செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் பொது போக்குவரத்து இயங்கும்:! தமிழக அரசு

கொரோனா பரவல் காரணமாக பொது போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.இதனால் பொது மக்களின் வாழ்வாதாரமும் முடங்கிக் கிடக்கின்ற நிலையில்,ஒவ்வொரு பொது ஊரடங்கின் தளர்வுகள் அறிவிக்கும் பொழுதும் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்க மாட்டார்களா? என்று மக்கள் எதிர் பார்த்து வந்தனர்.அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் பொது போக்குவரத்து இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.பொது போக்குவரத்து இயக்க கொரோனா பரவுதளின் எண்ணிக்கை வகையில் தமிழகத்தின் மாவட்டங்களை 8 மண்டலங்களாக பிரித்து உள்ளது.இந்த மண்டலங்களில் விவரங்கள் பின்வருமாறு:

மண்டலம் 1 : சேலம்,ஈரோடு,திருப்பூர்,
நாமக்கல்,கோவை,நீலகிரி, கரூர்

மண்டலம் 2 : கிருஷ்ணகிரி,தருமபுரி, திருப்பத்தூர்,வேலூர், ராணிப்பேட்டை

மண்டலம் 3 : திருவண்ணாமலை,
கள்ளக்குறிச்சி,விழுப்புரம், கடலூர்

மண்டலம் 4 : பெரம்பலூர்,தஞ்சை,
நாகை, திருவாரூர், திருச்சி,புதுக்கோட்டை, அரியலூர்

மண்டலம் 5 : மதுரை,தேனி திண்டுக்கல்,சிவகங்கை, விருதுநகர்,ராமநாதபுரம்

மண்டலம் 6 : கன்னியாகுமரி,தூத்துக்குடி,
தென்காசி,நெல்லை

மண்டலம் 7 : திருவள்ளூர் காஞ்சிபுரம்,செங்கல்பட்டு

மண்டலம் 8 : சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள்.

மண்டலம் 7 மற்றும் 8 தவிர்த்து மற்ற மண்டலங்களில் 50% பொது போக்குவரத்து இயங்கும் என்றும்,மண்டலங்க்குள் செல்வதற்கு இ- பாஸ்
தேவையில்லை என்றும், தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.பொது போக்குவரத்து இயக்கப்பட்டாலும் மக்கள் சரியான இடைவெளியை கடைபிடித்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.