#Breakingnews:! விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Photo of author

By Pavithra

விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில்,கொரோனா பரவலை கட்டுப்படுத்த,பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து கூட்டம் கூடி வழிபடுவதற்கும்,கூட்டம் சேர்ந்து விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் தடைவிதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு ,விநாயகர் சிலையை அவரவர்கள் வீட்டிலே வைத்து வழிபட்டு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கானது நேற்று விசாரணைக்கு வந்தபோது,வழிபாட்டு தலங்களில் விநாயகர் சிலையை வைத்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து மக்கள் வழிபட ஏதேனும் வழிகள் உண்டா? ஐந்து அல்லது ஆறு நபர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று நீர்நிலைகளில் விநாயகர் சிலையை கரைக்கலாமா? இது பாதுகாப்பானதா? போன்ற கேள்விகளை தமிழ்நாடு அரசிடம் எழுப்பி, இதற்கு பதிலளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கானது,அரசு சார்பில் அளித்த விளக்கத்தின்படி,
விநாயகர் சிலையை அவரவர்கள் வீட்டில் வைத்து வழிபடவும் தனிநபராக சென்று விநாயகர் சிலையை நீர்நிலையில் கரைக்கவும் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.தமிழ் நாடு அரசு பிறப்பித்த விதிமுறைகளை தளர்வுபடுத்த இயலாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
உயர் நீதிமன்றம் அளித்த இந்த உத்தரவிற்கு,முழு ஒத்துழைப்பு தருவோம் என்று இந்து முன்னணி தமிழ்நாடு சிவசேனா கட்சி உத்தரவாதம் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.