தமிழகத்தில் சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

0
143

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கீழ்டுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தர்மபுரி,சேலம்,நீலகிரி, புதுச்சேரி,காரைக்கால் மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் அடுத்த 48
மணிநேரத்தில்,மதுரை,
விருதுநகர்,சேலம்,
கிருஷ்ணகிரி,தர்மபுரி, காரைக்கால், சிவகங்கை, நாமக்கல்,திருச்சி திருவண்ணாமலை,
பெரம்பலூர்,வேலூர், அரியலூர்,விழுப்புரம், மற்றும் தமிழகத்தின் சில கடலோர பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Previous articleபெங்களுரு அணியின் கேப்டனாக கோலி தொடருவாரா?
Next articleஅசுர வேகத்தில் வளர்ந்து வரும் அசுரன் பட ஹீரோ!