ஈரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்து!

Photo of author

By Pavithra

ஈரோடு மாவட்டம் திம்பம் பகுதியில் சரக்கு லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

ஈரோடு மாவட்டம் திம்பம் பகுதியில்,கோவைக்கு பேப்பர் லோடு ஏற்றிக் கொண்டு சென்றிருந்த லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.மலைப்பகுதி என்பதால்,அப்பகுதியில் மூன்று மணி நேரம் போக்குவரத்து முடங்கியது.மேலும் ஜேசிபி உதவியுடன் கவிழ்ந்த லாரி மீட்டெடுத்த பின்னர்,மூன்று மணி நேரமாக காத்திருந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.