இனி பெண்கள் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் மூலமாகவே புகார் அளிக்கலாம்! புதிய வசதி!

0
145

இனி பெண்கள் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் மூலமாகவே புகார் அளிக்கலாம்! புதிய வசதி!

சென்னை மாவட்ட காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் கடந்த ஜூலை மாதத்தில், கொரோனா காலத்தில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு,பொதுமக்கள் தங்களின் புகார்களை வாட்ஸ்அப் வீடியோகாலின் மூலம் தெரிவிக்கலாம் என்று அறிவித்திருந்தார்.இவரின் அணுகுமுறை மக்களுக்கு பெரிதும் பயன் பெறுவதாக இருந்ததினால் சென்னை பொதுமக்கள்,இந்த திட்டத்தினை விரிவுபடுத்த தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று,தமிழக அரசு மற்றும் சென்னை மாவட்ட காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலின் உத்தரவின் பெயரில் 12 காவல் ஆணையர்களின் தொலைபேசி எண்கள் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியிடப்பட்டது.மக்கள் தங்களின் புகார்களை,செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 12:00 மணி முதல் 1 மணி வரை தொடர்பு கொண்டு மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டது.

தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்,மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுப்பதற்காக,சமூக வலைதளப் பக்கத்தில் புகார் அளிக்கும் வசதியை சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று தொடங்கி வைத்துள்ளார்.ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலமாக பொதுமக்கள் புகார்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்காக இந்த சமூக வலைத்தள கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் கூறினர்.

 

Previous articleரஷ்யாவில் இத்தனை லட்சத்தை தாண்டியதா கொரோனா?
Next articleராஜபாளையம் – குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!!