மக்களே குட் நியூஸ்:! ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்யும் தேதி அறிவிப்பு!
நாடு முழுவதும் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும்,ரயிலில் பயணிப்பதற்கான முன்பதிவு செய்துகொள்ளும் தேதியையும் ரயில்வே வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக,பேருந்து ரயில் விமானம் போன்ற அனைத்து பொது போக்குவரத்துக்களும் முடக்கப்பட்டது.இந்நிலையில் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காகவும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கும் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.
தற்போது தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஏழாம் கட்ட ஊரடங்கு நிறைவு பெற்று, செப்டம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை எட்டாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தில் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.தமிழ்நாட்டைப் போன்று இந்தியாவின் சில மாநிலங்களிலும் பொதுப் போக்குவரத்தை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் வருகின்ற செப்டம்பர் 7- ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிப்பு வெளியானது.இதனையடுத்து தமிழகத்தில் முதல் கட்டமாக செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் 7 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னையிலிருந்து கோவை, மதுரை,செங்கல்பட்டு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இன்று ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ், ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.அதில் குறிப்பிட்டுள்ளவாறு செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும்,இதற்கான முன்பதிவு வருகின்ற செப்டம்பர் 10-ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.