கல்லூரி இறுதிப் பருவத்தேர்வு வருகின்ற செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கும்:! பல்கலைக்கழகம் அறிவிப்பு!

0
126

கல்லூரி இறுதிப் பருவத்தேர்வு வருகின்ற செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கும்:! பல்கலைக்கழகம் அறிவிப்பு!

நெல்லை,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் முதுநிலை மற்றும் இளநிலை அறிவியல் பட்டம் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு வருகின்ற செப்டம்பர் 21- ஆம் தேதி முதல் இறுதிப் பருவத் தேர்வு நடைபெறும் என்று பல்கலைக்கழக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை மற்றும் இளநிலை அறிவியல் மாணவர்களுக்கு செப்டம்பர் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும்,வணிகவியல் மாணவர்களுக்கு பகல் 2 மணி முதல் 5 மணி வரையிலும் அவர்கள் பயின்ற கல்லூரிகளில் தேர்வு நடைபெறும் என்று

பல்கலைக்கழக சார்பில் கூறப்பட்டுள்ளது.மேலும் இறுதியாண்டு எம்ஃபில் பயிலும் மாணவர்களுக்கு வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் பல்கலைக்கழக சார்பில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள் அவர்கள் பயின்ற கல்லூரிகளுக்கு வந்து தேர்வு எழுத இயலாதவர்களுக்கு,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளிலும் தேர்வு எழுத வழிவகை செய்யப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

கல்லூரிகளுக்கு வந்து தேர்வு எழுத இயலாத மாணவர்கள் தங்களது இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு கல்லூரிகளில் தேர்வு எழுத வாய்ப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பல்கலைக் கழக சார்பில் கூறப்பட்டுள்ளது.அதேபோன்று வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள்,நேரில் வந்து தேர்வு எழுத முடியாதபட்சத்தில் இணையதளம் மூலமாகவோ அல்லது பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்யும் ஏதேனும் ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும்,அவ்வாறு ஆன்லைன் மூலமாகவோ அல்லது வெளிநாடு,வெளி மாநிலங்களில் இருக்கும் மாணவர்கள் உடனடியாக அந்தந்த கல்லூரி முதல்வரை தொடர்பு கொண்டு வரும் 10ஆம் தேதிக்குள் அவர்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Previous articleஉக்ரேனில் நடந்த வினோத சம்பவம்
Next articleஇத்தனை பில்லியன் செலவில் கட்டப்பட்ட சுரங்கப்பாதையா?