பப்ஜி விளையாட்டிருக்கு இறுதிச் சடங்கு நடத்திய பப்ஜி பிரியர்கள்! வைரல் வீடியோ உள்ளே!
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம்,தகவல் தொழில்நுட்ப கொள்கைவிதிகளை மீறியதாகவும், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை குறைக்கும் விதமாக இருப்பதாகவும் கூறி,டிக்டாக்,ஷேர் இட், யூஸி ப்ரவுசர், கேம்ஸ்கேனர் உள்ளிட்ட,இந்தியாவில் அதிகம் பயன்பாட்டில் இருந்துவந்த 59 சீன செயல்களை மத்திய அரசு
முற்றிலும் தடை செய்தது.இதைத்தொடர்ந்து ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயலிகளுடன் தொடர்புடைய மேலும் 118 சீன செயலிகளை மத்திய அரசு கடந்த செப்டம்பர் 2- ஆம் தேதி தடை செய்தது. இந்த 118 ஆஃப்களில்,இந்தியாவில் அதிகம் பயன்பாட்டில் இருந்து வந்த பஜ்ஜி கேம்மும் ஒன்றாகும்.
மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் இந்தியாவின் பல இளைஞர்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியது.மீம்ஸ் கிரியேட்டர்கள் பலர் பப்ஜி தடை தொடர்பாக மீம்ஸ்களையும், வீடியோக்களையும் பகிர்ந்தனர்.இந்நிலையில் இளைஞர்கள் சிலர் பஜ்ஜி கேமிருக்கு பேனர் அடித்து அதற்கு மாலை அணிவித்து,ஒரு மனிதன் இறந்தால் எவ்வாறு இறுதிச்சடங்கு நடத்துவோமோ அதேபோன்று,அந்த பப்ஜி பேனரையும் ஊர்வலமாக தூக்கி சென்று இறுதி சடங்கு நடத்தினர்.மேலும் இந்த வீடியோவானது தற்போது அதிகளவில் வைரலாகி பகிரப்பட்டு வருகின்றது.இறுதிச் சடங்கு வீடியோவை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.
https://twitter.com/News4TamilLive/status/1302937481512275968?s=19