மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்:! தனியார் பேருந்துகள் இயக்கம் தொடங்கிவிட்டன!

0
126

மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்:! தனியார் பேருந்துகள் இயக்கம்
தொடங்கிவிட்டன!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதியிலிருந்து அனைத்து பொது மற்றும் தனியார் போக்குவரத்துகளும் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்தது.இந்நிலையில் தனியார் பேருந்துகள் குறிப்பாக ஆம்னி பேருந்துகள்,பஸ்கள் இயங்காத நாட்களுக்கு வரிவிலக்கு,போன்ற பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்றால் மட்டுமே தனியார் பஸ்கள் இயக்கப்படுமென்று, தனியார் பஸ் மற்றும் தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்களின் சங்கங்கள் அறிவித்தன.அவர்கள் கூறியதைப் போன்றே செப்டம்பர் 7 ஆம் தேதியிலிருந்து தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் தனியார் பஸ் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.அந்த ஆலோசனைக் கூட்டத்தில்,வட்டாரப் போக்குவரத்து ஆர்டிஓ அலுவலகங்களில் ஸ்டாப்பெஜ் என்ற படிவத்தை பூர்த்தி செய்தவர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாத நாட்களுக்கு
இன்சூரன்ஸ் கட்டணம் செலுத்துவதிலிருந்து அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த படிவத்தை பூர்த்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அந்தந்த பஸ் உரிமையாளர்கள் செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு பயணிக்கும் வகையில் பஸ்கள் இயக்க வேண்டும் என்றும் அந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது போன்றே நேற்று திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டும் குறைந்த அளவு தனியார் பஸ்கள் இயக்கப்பட்டது.இன்று முதல் தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

Previous articleஇந்தியாவில் ஒரே நாளில் 90,123 பேருக்கு கொரோனா; 1,290 பேர் உயிரிழப்பு!
Next articleகாற்றே இல்லாத கிரகத்தில் உயிரினங்கள் இருகிறதா?