வங்க கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு:! தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!!

0
149

வங்க கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு:! தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!!

வட கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும்,மேலும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நீலகிரி,கோவை ஆகிய இரு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,காஞ்சிபுரம் செங்கல்பட்டு,திருவள்ளூர், விழுப்புரம்,நீலகிரி, கன்னியாகுமரி,சேலம்,
கிருஷ்ணகிரி,தர்மபுரி,உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும்,சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கடலோரப் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Previous articleதமிழக அரசின் புதிய திட்டம்! நடமாடும் ரேஷன் கடைகள்!
Next articleதொடர்ந்து வந்த ஆபாச அழைப்புகள்! கடைசியில் வெளிவந்த சம்பவம்!