தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

0
119

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பள்ளிகள் திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது,பள்ளிகள் திறக்கப்பட்டாத நிலையில்,
பெற்றோர்களிடம் முழுமையாக கல்வி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை விளக்கம் கேட்கப்பட்டுள்ளது மேலும் இந்த வருடத்தில்,அரசு பள்ளியில்,மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும்,2.5 லட்சம் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து உள்ளதாகவும் அவர் கூறினார்.மேலும் தமிழகத்தில் புதிதாக 15 இடங்களில் தொடக்கப்பள்ளிகளும் 10 இடங்களில் உயர்நிலைப் பள்ளிகளும் துவக்கப்பட்ட இருக்கின்றது என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் பள்ளிகள் திறப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபொழுது,தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லை என்றும், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Previous articleஅரசு மருத்துவமனையில் சட்டென்று மின்தடை:! ஆக்சிஜன் பற்றாக்குறை! நோயாளிகள் உயிரிழப்பு!
Next articleவிளக்கு ஏற்றும் முன் இதை செய்தால் லட்சுமி உங்கள் வீடு தேடி ஓடி வருவாள்!