சமீபகாலமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது தொடர்ந்து குறைந்து வருகிறது. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசும் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர் ஒருவர் வித்தியாசமான விளம்பரத்தை கையிலெடுத்துள்ளார்.
திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு மாணவர் சேர்க்கைகாக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் துணிப் பையில் விளம்பரம் செய்தது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
அரசுப் பள்ளிக்கு விளம்பரம் செய்வது மிகவும் பாராட்டுக்குரியது என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
திருத்துறை பூண்டியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் திரு மாறன் என்பவர் தனது பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்காக ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சேர்க்கை நடைபெற உள்ளதாக துணிப்பையில் விளம்பரம் செய்துள்ளார்.
மேலும் அந்தத் துணிப் பையில் சேர்க்கை கட்டணம் இல்லை மாத கட்டணம் இல்லை நன்கொடை இல்லை என குறிப்பிட்டுள்ளது.
மேலும் அனுபவமிக்க ஆசிரியர்கள், காற்றோட்டமான வகுப்பறைகள் நவீன ஆய்வகங்கள் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளது.
கல்வியை வியாபாரமாக கருதும் இந்த காலத்தில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கைக்காக துணிப்பையில் அச்சிடப்பட்டு விளம்பரம் செய்யும் தலைமை ஆசிரியருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.