புதிய கல்விக் கொள்கை:! மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரசு அளித்திருக்கும் கடைசி வாய்ப்பு!

Photo of author

By Pavithra

புதிய கல்விக் கொள்கை:! மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரசு அளித்திருக்கும் கடைசி வாய்ப்பு!

கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய கல்வி கொள்கைக்கு,மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மத்திய அரசின் இந்த புதிய கல்வி கொள்கையானது தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகின்றது.

அரசியல் கட்சிகளுக்கிடையேவும், கல்வியாளர்களுக்கிடையேவும், பல்வேறு கருத்துகள் இந்த புதிய கல்வி கொள்கையை பற்றி நிலவி வருவதால்,பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்க பள்ளி கல்வி துறை சார்பிலும் உயர்கல்வி துறை சார்பிலும் தனித்தனியே நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்த குழுக்கள் மூலம் நேற்று முன்தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைகழக துணைவேந்தர்களிடம் காணொலி காட்சி வாயிலாக,முதன்மை செயலர் அபூர்வா தலைமையில் கருத்துகள் கேட்கப்பட்டது.

இதனையடுத்து இன்று காலை 9.30 மணி முதல் மூன்று குழுவாக ஆன்லைன் மூலம் மாணவர்களிடையேவும், பெற்றோர்களிடமும் மற்றும் பேராசிரியர்களிடமும் இந்த நிபுணர் குழுவானது புதிய கல்விக் கொள்கையை பற்றி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவிரிகின்றது.