ரேஷன் கடையில் இதை செய்தால் அபராதம் வசூலிக்கப்படும்:! கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை!

0
215

ரேஷன் கடையில் இதை செய்தால் அபராதம் வசூலிக்கப்படும்:! கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை!

தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில் முறைகேடு,இழப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்தல் ஆகியவை தொடர்பாக அரசுக்கு ஏற்படும் இழப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட நியாயவிலை கடை பணியாளிடமிருந்து கட்டணம் வசூலிக்க உணவு பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவின் பெயரில் தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திரு. இல. சுப்பிரமணியன் அவர்கள் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

நியாய விலை பொருள் விற்பனை முனை எந்திரத்தையும் அதன் உண்மை இருப்பையும் சரி பார்க்கும் பொழுது,பொருட்கள் கூடுதல் இருப்பு காணப்பட்டால்,குடும்ப அட்டைதாரர்களுக்கு தெரியாமல் நியாய விலை கடை ஊழியர்கள் போலி பட்டியலை தயாரித்தாகவும்,பொருட்கள் விநியோகம் செய்யும் பொழுது எடையில் முறைகேடு செய்ததாகவும்தான் கருதப்படும்.

அதாவது,போலி பட்டியல் மூலம் மக்களுக்கு சென்று சேர வேண்டிய அத்தியாவசிய பொருட்களை திருடுவதால்தான் நியாயவிலை கடைகளில் பொருட்களின் இருப்பு அதிகம் காணப்படுகிறது. இது மிகவும் முறைகேடான செயலாகும். எனவே நியாய விலைக் கடைகளில் பொருட்கள் அதிகம் இருப்பு இருந்தால் போலி பட்டியல் தயாரித்து பொருட்களை திருடியதாகதான் கருதப்படும்.எனவே அத்தியவசிய பொருட்கள் மக்களுக்கு சரியாக விநியோகம் செய்யாமல் அதிகம் இருப்பு வைத்திருக்கும் நியாய விலை கடை ஊழியரிடம், வட்டம் அல்லது மண்டல அலுவலர் உடனடியாக அபராத தொகையை வசூலித்து அரசு கணக்கில் செலுத்த வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Previous articleஇப்படி விற்பனை செய்யப்படும் இனிப்புகளுக்கு காலாவதி தேதி இனி கட்டாயம்..! FSSAI அறிவிப்பு!
Next articleமுசிறி தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here