சேலத்தில் ANPR கேமரா:! ஆன்லைன் அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கியப் பதிவு தெரிந்துக்கொள்ளுங்கள்!

0
155

சேலத்தில் ANPR கேமரா:! ஆன்லைன் அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கியப் பதிவு தெரிந்துக்கொள்ளுங்கள்!

சேலம் மாவட்டம் ஐந்து ரோடு பகுதியில் ANPR கேமரா பொருத்தப்பட்டுள்ளது.இதன் மூலம்,வாகன ஓட்டிகள் இந்த தவறை செய்தால் மிக எளிமையாக காவல்துறையினரிடம் சிக்கிக்கொண்டு நீங்கள் ஆன்லைனில் அபராதம் கட்ட நேரிடும்.

மூன்றாம் கண் எனப்படும் சிசிடிவி கேமராக்களில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட,ANPR கேமராக்களை ரோட்டில் பொருத்துவதன் மூலம்,வாகனங்களின் பல வடிவ எண் ஸ்டைல்களையும் எளிதாக ஸ்கேன் செய்து படமெடுக்கும் வசதியைக் கொண்டுள்ளது.
மிகத் துல்லியமாக படம் எடுக்கும் வசதி கொண்ட இந்த கேமராவின் புகைப்படத்தின் மூலம் ஓட்டுநர்களின் அடையாளங்களை கூட கண்டுபிடிக்கலாம் என கூறப்படுகிறது.இந்த கேமராவின் மூலம் வாகனம் சாலையைக் கடக்கும் நேரம், இடம் என அனைத்தும் உடனடியாக சேமிக்கப்படுகின்றன.

இதனால் காணாமல் போகும் வாகனங்களின் தகவல்களை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தால் இந்த அதிநவீன கேமராக்களின் மூலம் காணாமல்போன வாகனங்களையும் எளிதாக கண்டுபிடித்துவிடலாம். இதுமட்டுமின்றி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் தப்பிச் செல்லும் வாகனங்களையும் இந்த கேமராக்கள் மூலம் எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
இதுமட்டுமின்றி இந்த கேமராவின் மிக முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் இரவிலும் மிகத்துல்லியமாக புகைப்படத்தை பதிவு செய்யும் திறன் கொண்டவை.

இதுபோன்ற கேமராக்கள் பல்வேறு பெரு நகரங்களில் சாலைகளில் பொருத்தப்பட்டுள்ளது தற்போது,சேலம் மாவட்டத்தில் 5 ரோடு பகுதியில் இந்த கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு நூதன தண்டனை கொடுக்கும் வகையில் சேலம் மாவட்டம் 5 ரோட்டில் சேலம் மாநகர் காவல் துறை சார்பில் ANPR ( Automatic Number Plate Recognition) என்ற கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கேமராவின் மூலம் ஹெல்மெட் அணியாமல் செல்லும் அனைத்து வாகனங்களின் நம்பர் பிளேட்-யை( Number Plate ) மிகத்துல்லியமாக ஆட்டோமேட்டிக்காக புகைப்படம் எடுக்கப்படுகிறது.இதன் மூலம் ஹெல்மெட் அணியாதவர்கள் எண்களின் முகவரிக்கு ஆன்லைன் ஃபைன் சலான் (online fine challan) அனுப்பப்படுகின்றது.
இனி காவல் துறையே இல்லை என்றாலும்,ஹெல்மெட் அணியாதவர்கள் இந்த கேமராவின் மூலம் சிக்கிக் கொள்வார்கள்.எனவே சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்படுகின்றது.

Previous articleபாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு 10 லட்சம் இழப்பீட்டு தொகை:! தமிழக அரசு உத்தரவு!
Next articleபிரம்மாண்டமாக தயாராக உள்ள அந்தாதுன் தமிழ் ரீமேக்! லேட்டஸ்ட்  அப்டேட்!