நண்பர்களுடன் தனி விமானத்தில் சென்ற ஓ.பி.ஆர் ……! பயணத்திற்கு காரணம் பண பதுக்கல் …..? மத்திய அரசு சந்தேகம்…..!

0
111

தமிழகத்தின் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் அவர்கள் தனி விமானத்தில் வெளிநாட்டிற்கு போனது தொடர்பாக, விசாரணை செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உலகளாவிய அளவில், கொரோனா தொற்று மிகப்பெரிய பாதிப்பையும், தாக்கத்தையும், ஏற்படுத்தி இருக்கின்றது. இத்தொற்றின் தாக்கம் இந்தியாவையும் பாதித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அன்றாட வாழ்வினை கூட எதிர்கொள்ள முடியாத நிலையில் போராடி வருகின்றார்கள்.

இந்த சூழ்நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார், சென்ற வாரம் தன் நண்பர்களுடன் ஒரு தனி விமானத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார், அதன்பின்பு மாலத்தீவில் இருந்து மொரிஷியஸ் சென்றுள்ளார் அங்கே இந்தியா, மற்றும் தமிழ்நாட்டை சார்ந்த பல தொழிலதிபர்கள், மற்றும் அரசியல்வாதிகள், என பலரும் தங்களது கணக்கில் காட்டப்படாத பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக பொதுவாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

எனவே ரவீந்திரநாத் குமார் அங்கே சென்று வந்தது அரசியல்வாதிகள் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் மத்திய அரசின் அனுமதி இன்றி தனி விமானத்தில் வெளிநாட்டிற்கு சென்றார் எனவும், குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது ரவீந்திரநாத் குமார் விமானம் மூலமாக மாலத்தீவு மற்றும் மொரிஷியஸ் நாட்டில் தரை இறங்குவதற்கு விமான நிலைய அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்றுள்ளார், ஆனாலும் வெளிநாட்டு சுற்றுலாவிற்கு செல்வதற்கான அனுமதியை அவர் மத்திய அரசிடம் பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதனை அடுத்து மத்திய அரசு ஓ பன்னீர்செல்வம், மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார், ஆகியோரிடம் இது சம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Previous articleஉரிமையாளர்களை சந்திக்கும் முதல்வர்…..! முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு…..!
Next articleவேளாண் துறையில் வேலை வேண்டுமா? உடனே Apply பண்ணுங்க!