காவிரி மற்றும் குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்…! முதல்வர் உறுதி…!

0
204

புதுக்கோட்டை மாவட்டம் ஐ டி சி ஆசிர்வாத் ஆட்டா தொழிற்சாலையினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்திருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி சென்ற எடப்பாடி பழனிச்சாமி திருச்சியிலிருந்து கார் மூலமாக விராலிமலை சென்றடைந்தார்.

அங்கே சுமார் 100 கோடி மதிப்பிலான 55 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு இருக்கின்ற ஐடிசி தொழிற்சாலையினை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொழிற்சாலை மூலமாக அந்த மாவட்டத்தில் உள்ள 2200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டும் என்று தெரிவித்திருக்கிறார் தொழில் தொடங்க உகந்த மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது என்று கூறி மகிழ்ச்சி அடைந்தார்.

அந்நிகழ்வை முடித்துவிட்டு அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலையில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டின் நினைவுச் சின்னத்தையும் திறந்து வைத்திருக்கிறார் அந் நிகழ்வில் பேசிய முதல்வர் தமிழ்நாட்டிலேயே அதிக அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் ஒரு மாவட்டம் புதுக்கோட்டை எனவும் விராலிமலை ஒரு வீரம் செறிந்த மண் எனவும் புகழ்ந்து பேசினார்.

காவேரி மற்றும் வைகை குண்டாறு ஆகிய நதிகளின் இணைப்பு திட்டத்தில் முக்கிய பங்காக விளங்கிவரும் கவிநாடு கண்மாய்க்கு சென்று அங்கே ஆய்வு நடத்தினார் அத்துடன் காவிரி மற்றும் குண்டாறு இணைப்பு திட்டம் மிக விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதிபட தெரிவித்தார்.

Previous articleகொங்குமண்டலம் அதிமுகவிற்கா…? திமுகவிற்கா…? மல்லுக்கட்டும் தலைமைகள்…!
Next articleகள்ளக் காதலனுடன் அஜால் குஜால் செய்த மனைவி! அடங்கமாட்டியா? எத்தனை முறை சொல்லட்டும்? பிறகு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here