7.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் முயற்சி நிச்சயம் நிறைவேறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நலத்திட்ட உதவிகளை ஆரம்பித்து வைத்ததற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திரு செங்கோட்டையன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். ஏழை மாணவ மாணவிகளுக்கும் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கின்ற மாணவ மாணவிகளுக்கும் அதிமுக ஆட்சியில் அவர்களின் உரிமை உள்பட அனைத்தும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.
நீட் தேர்விற்காக 426 தேர்வு மையங்களில் சுமார் 6 ஆயிரம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பயிற்சி மையங்களில் படித்த அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார் 303 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான அங்கீகாரம் வெகு விரைவில் கிடைக்கும் என்று தெரிவித்த அவர் நீட் தேர்வு உன் பட மற்ற எந்த தேர்வுகளுக்கும் பயிற்சி அளிப்பதற்கான அனுமதியை தனியார் மையங்களுக்கு அரசு வழங்காது என்று உறுதிபட தெரிவித்து இருக்கிறார்.