வெங்காய விலை மளமளவென உயர்ந்து வரும் நிலையில் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக வெங்காயத்தின் இறக்குமதியின் கட்டுப்பாட்டு விதிகளில் மத்திய அரசு தளர்வுகளை கொண்டுவந்துள்ளது.
சென்ற ஆகஸ்ட் மாதத்திலிருந்து வெங்காய விலை மிகக் கடுமையாக எதிரி வருகின்றது மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் பெய்து வந்த கனமழை காரணமாக சேமித்து வைத்திருந்த வெங்காயங்கள் வீணாகி அதன் காரணமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இப்போதைய நிலவரப்படி சென்னை கோயம்பேடு சந்தையில் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 100 முதல் 110 வரை வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது இந்த நிலையில் வெங்காய விலையை ஒரு நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
வெங்காய ஏற்றுமதியில் பல கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள மத்திய அரசு வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான சான்றிதழ்கள் வாங்குவதிலும் பல தளர்வுகளை வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வரை அறிவிக்க உள்ளது அதன்படி அஞ்சு வருஷத்துக்கு முன்னால அந்நிய நாடுகளில் இருந்து சுத்தப்படுத்தாமல் இறக்குமதி செய்யப்படும் வெங்காயங்களை உள்நாட்டில் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மூலம் சுத்தம் செய்ய திட்டமிடபட்டுள்ளது.
மேலும் வெங்காய இறக்குமதி தொடர்பான விதிமுறைகளை தளர்த்தியது சம்பந்தமான தகவல்களை வெளிநாடுகளுக்கு தெரிவித்து அங்கு இருக்கும் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு இந்தியாவிற்கு விரைவாக ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக தெரிகின்றது அது மட்டுமன்றி நாட்டில் வெங்காய விலை உயர்வை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு விலை குறைப்பதற்கும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இறக்குமதி செய்யும் விதிமுறைகளை தளர்த்தி உள்ளதால் வெங்காயத்தின் விலை மிக விரைவில் கட்டுக்குள் வந்துவிடும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கின்றது மேலும் குறுவை சாகுபடி செய்து அதிக அளவில் வெங்காயத்தை இருப்பு வைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது பயிரிடப்பட்ட வெங்காயம் மிக விரைவில் சந்தைக்கு வரும் எனவும் அப்படி வரும்போது வெங்காயத்தின் விலை சகஜமான நிலைக்கு வந்துவிடும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.