பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் சிலையின் தங்க கவசம் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 58 ஆவது குருபூஜை விழா ஆகியவை எதிர்வரும் முப்பதாம் தேதி அன்று கொண்டாடப்படுகின்றது இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகில் இருக்கின்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப் படுவது வழக்கம்.
இந்த நிலையில் மதுரை வங்கி லாக்கர் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த தங்க கவசத்தில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் இன்றைய தினம் பெற்றுக்கொண்டார் இந்த கவசம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் நினைவாக காப்பாளர் இடம் வழங்கப்படுகின்றது இதனை தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய வலைதள பக்கத்தில் தெரிவித்திருக்கின்றார் குருபூஜை நிறைவு பெற்றவுடன் இந்த தங்க கவசம் மறுபடியும் வங்கியிலேயே பத்திரமாக வைக்கப்படுகின்றது.
இதற்கு முன்பாக தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சென்ற 2014 ஆம் ஆண்டு ரூபாய் நான்கு கோடி மதிப்பிற்குரிய சுமார் 13.5 கிலோ எடை உள்ள தங்க கவசத்தினை பசும்பொன் கிராமத்திற்கு நேரில் சென்று வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.