பயங்கர அப்செட்டில் திருமாவளவன்…! நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறுமா…!

0
196

பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மத்தை தடை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நாளை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கின்றது இது குறித்து அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களையும் மற்றும் பெண்களையும் மிக மோசமாக இழிவு செய்யும் மனுஸ்மிருதியை தடை செய்தே தீரவேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார்.

இது சம்பந்தமாக நேற்றைய தினம் அவருடைய வலைதளப் பக்கத்தில் அவதூறு பரப்புவோரின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும் ஆயிரம் தலைமுறை இழிவை துடைப்போம் என்று ஒரு பதிவிட்டதுடன் மனுதர்மம் என்ற நூலிலிருந்து சில பக்கங்கள் எடுத்து பதிவிட்டிருந்தார்.

பெண்களை எவ்வாறெல்லாம் இழிவு படுத்த முடியும் என்று தெரிவிக்கும் வகையில் திருமாவளவன் கூறியதில் இருந்து ஒரு பகுதியை எடிட் செய்து இந்து பெண்களை திருமாவளவன் இழிவு செய்து விட்டார் என சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங் செய்திருக்கின்றார்கள் இதனை தொடர்ந்து திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டு பெண்ணுரிமை போராளி திருமா என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்கள் அது இப்போது மிகப் பெரிய அளவில் பிரிண்ட் ஆகி இருக்கின்றது.

பெண்ணுரிமைப் போராளி திருமா சாதனத்தின் நேர் எதிரி டாக்டர் திருமா என்ற ஹேஷ் டேக்கில் திருமாவளவனின் புகைப்படங்கள் மற்றும் பேச்சுக்கள் ஆகியவற்றை வெளியிட்டு பிரிண்டிங் செய்து வருகிறார்கள் இந்நிலையில் நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்து இருக்கிறது.

Previous articleMPஅண்ணனுக்கு ஒத்த செருப்பு பார்சல்! தருமபுரி எம்பி செந்தில்குமாரை விளாசிய நடிகர் பார்த்திபன்
Next articleதிண்டுக்கல் அருகே திமுக நிர்வாகி கொடூர கொலை…! காவல்துறையினர் தீவிர விசாரணை…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here