கடலூர் மாவட்டத்தில் அதிமுகவின் பிரம்மாஸ்திரத்தை அதிமுகவுக்கு எதிராகவே திருப்பும் ஸ்டாலின்…! என்ன செய்யப்போகிறது ஆளும் தரப்பு…!

0
124

எதிர்வரும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகின்றார் நிர்வாக வசதிக்காக பல மாற்றங்களை கட்சியில் அவர் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து கடலூர் மாவட்டத்தில் திமுக மாவட்டசெயலாளர்களை மூன்று நபர்களாக அதிகரிக்க ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது கடலூர் மாவட்டம் 9 சட்டமன்ற தொகுதிகளை உடையதாகும்.

அதில் அதிமுகவிடம் 5 தொகுதிகள் இருப்பதாக சொல்கிறார்கள் மீதமுள்ள 4 தொகுதிகள் திமுக வசம் இருக்கின்றது இந்த ஒன்பது தொகுதிகளுக்கும் அதிமுகவில் ஒரு மாவட்ட செயலாளருக்கு மூன்று தொகுதிகள் என்று மூன்று மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் அதே பாணியை பின்பற்றி திமுக தலைமையும் மூன்று மாவட்ட செயலாளர்களை அமர்த்த இருப்பதாக தெரிகின்றது.

கடலூர் சிதம்பரம் புவனகிரி குறிஞ்சிப்பாடி காட்டுமன்னார்கோயில் என 5 தொகுதிகள் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகின்ற குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்திடமிருந்து இரு தொகுதிகள் பிரிக்கப்பட்டு கடலூர் பண்ருட்டி குறிஞ்சிப்பாடி ஆகிய தொகுதிகள் அடங்கிய கடலூர் மாவட்டம் கிழக்கு செயலாளராக அவர் நியமிக்கப்பட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.

Previous articleபேக்ஸ் ஆன் வீல்ஸ் திட்டத்தை தொடங்கி வைத்த வடக்கு ரயில்வே நிர்வாகம் !! பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சி !!
Next articleஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு வந்த ராவணன்…! மலைத்துப் போய் நின்ற மருத்துவர்கள்…!