ஆளுநர் பதவியை விமர்சனம் செய்யும் திமுக அதிகாரத்தில் இருந்தபோது பதவியினை அளிக்காதது ஏன்…! அமைச்சர் சரமாரி கேள்வி…!

0
144

இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கின்றார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மருத்துவப் படிப்பிற்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசுக்கு நற்பெயர் கிடைத்துவிடக் கூடாது என்ற உள் நோக்கத்தோடு செயல்படுகின்றது திமுக எனவும் முதலமைச்சர் அவர்களும் அரசினர் பள்ளியில் தான் படித்திருக்கிறார் எனவே அரசினர் பள்ளி மாணவர்களின் கஷ்டம் என்ன என்று முதலமைச்சருக்கு தெரியும் இந்த உள் ஒதுக்கீட்டில் அரசியல் செய்வதாக ஸ்டாலின் விடும் அறிக்கைகளே சுட்டிக் காட்டுகின்றனர் என்று தெரிவித்திருக்கிறார்.

பெண்களை போற்ற வேண்டும் அதற்கு மாறாக இழிவுபடுத்தக் கூடாது திருமாவளவன் பெண்களைப்பற்றி தெரிவித்தது கண்டிக்கத்தக்க ஒன்றாகும் ஆளுநர் பதவியினை விமர்சனம் செய்யும் திமுக மத்தியில் ஆட்சி செய்த போது எதற்காக அந்த பதவியை ஒழிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் இன்றைய தினம் காலை திமுக சார்பாக கிண்டியில் ஆளுநர் மாளிகையை முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

Previous articleஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு வந்த ராவணன்…! மலைத்துப் போய் நின்ற மருத்துவர்கள்…!
Next articleபயங்கர குஷியில் அரசு ஊழியர்கள்…! இனிப்பான செய்தியை சொன்ன தமிழக அரசு…!