பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிவேல் யாத்திரை ஆரம்பிப்பதற்கான நாள் தேர்வு செய்யப் பட்டுள்ளதால் ஆளுங்கட்சி முதல் எதிர்க்கட்சி வரை தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒருவித பயத்துடன் இருக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் அவர்கள் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்தும் விதமாக வெற்றிவேல் யாத்திரை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார் அதற்கான வேலைகளில் அந்தந்த மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
தமிழக முதலமைச்சரை சமீபத்தில் சந்தித்த பாரதிய ஜனதாவின் மாநில தலைவர் எல். முருகன் அவர்கள் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறாராம்.
இதைப்பற்றி தமிழக டிஜிபி அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்த பாரதிய ஜனதா கட்சியினர் இப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களிலும் இந்த யாத்திரைக்கு அனுமதி கேட்டு மனு அளித்து வருகின்றனர் காவல்துறையினர் அனுமதி அளித்தாலும் சரி அளிக்கவில்லை என்றாலும் சரி எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி முதல் வெற்றிகள் யாத்திரை திருத்தணியில் தொடங்கி டிசம்பர் மாதம் ஆறாம் தேதி திருச்செந்தூர் வரை நடக்க இருக்கின்றதாம்.