விளையாட்டில் மட்டுமல்ல…! சமூக அக்கறையிலும் கிங் தான் செம மாஸ் காட்டும் பெங்களூரு அணி…!

0
134

சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலே நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பச்சை நிற ஜெர்சியை அணிந்து விளையாட இருக்கிறார்கள் 2011ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் இருந்து இவ்விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரத்தினை பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி நடத்தி வருகின்றது ஐபிஎல் சீசன்களில் தங்களுடைய ரசிகர்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி சுற்றுச்சூழலை காக்க உதவி இருந்தார்கள்.

அதேபோல போட்டியை நேரில் காண வருகைதரும் ரசிகர்களை தனித்தனியாக வாகனத்தில் வராமல் பஸ்களில் வரவேண்டும் அவ்வாறு வந்தால் எரிபொருள் மிச்சமாகும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தியது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி.

சென்ற 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு போட்டியை நேரில் காண வந்திருந்த ரசிகர்கள் பேட்டரி வாகனங்களில் அழைத்து வரப்பட்டிருந்தனர் மேலும் ரசிகர்கள் சைக்கிளில் வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது சுற்றுச்சூழலை காக்க இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி.

இந்நிலையில் நாளை துபாயில் நடக்கவிருக்கும் ஆட்டத்தில் பூமியை காப்போம் ஆரோக்கியமாக இருப்போம் என்ற விழிப்புணர்வு வாசகத்தை பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி முன்னெடுத்து இருக்கின்றது.

Previous articleதமிழகத்தில் பாஜகவின் வெற்றிவேல் யாத்திரை தொடக்கம்…! பீதியில் அரசியல் கட்சியினர்…!
Next articleபோராட்டமா நடத்துறிங்க…!ஆக்‌ஷனில் இறங்கிய ஆளுநர் மாளிகை…!