முக்கிய பிரமுகரின் ட்வீட்டர் கணக்கு முடக்கம்…! ஆதரவாளர்கள் அதிர்ச்சி…!

0
121

நடன இயக்குனர் ரகுராம் அவர்களின் மகளும் நடிகையுமான காயத்ரி ரகுராம் சென்ற 2014 ஆம் ஆண்டு அமித்ஷாவை சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார் அதன் பின்பு கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக பாரதிய ஜனதா கட்சியில் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இப்போதும் அவர் அந்த பதவியில் இருந்து வருகின்றார் அவர் தன்னுடைய வலைத்தளத்தில் எதிர்கட்சிகளை விமர்சனம் செய்வது வழக்கமான ஒரு நிகழ்வு அவரது வீட்டை 3 கோடியே 69 லட்சம் நபர்கள் அனுதினமும் பார்வையிடுகின்றனர்.

அவர் சமீபகாலமாக ஆன்மீக தலங்களுக்கு சுற்றுலா சென்ற வண்ணம் இருந்தார் இந்நிலையில் மனுஸ்மிருதி சம்பந்தமாக கருத்து வெளியிட்டிருந்தார் காயத்ரி ரகுராம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மனுஸ்மிருதி சம்பந்தமாக வெளியிட்டிருந்த கருத்திற்கு பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் கடுமையான கண்டனங்களை தெரிவித்து இருந்தார்.

அதோடு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எதிராகவும் சில கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

இதனிடையே கடந்த 25ஆம் தேதி காயத்ரி ரகுராம் அவர்களுடைய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது ட்விட்டர் கணக்கு சட்டங்களை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது.

அதன் பின்பு காயத்ரி ரகுராம் பாஜகவில் இணைய தளக்குழுவை தொடர்பு கொண்டு நடந்ததை தெரிவிக்க அதன் பின்பு அன்று மாலையே 3 51மணி அளவில் காயத்ரி ரகுராம் அவர்களின் ட்வீட்டர் கணக்கு செயல்பட ஆரம்பித்தது

Previous articleசுத்தி சுத்தி அடிக்கும் காவல்துறையினர்…! விழிபிதுங்கும் பாஜகவினர்…!
Next articleகூலி கேட்ட தொழிலாளி… உயிருடன் எரித்த முதலாளிகள்..!! நடந்தது என்ன..??