பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதனை அடுத்து நீண்ட காத்திருப்புக்குப் பின் யாரும் எதிர்பாராத வண்ணம் தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். இந்த நிகழ்வுக்குப் பின் மூன்று மாதங்கள் கடந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார்.
அந்த பட்டியலில் வானதி சீனிவாசன் அவர்கள் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பாஜகவின் துணைத்தலைவர்கள் தேசிய செயலாளர்கள் தேசியப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஆனாலும் தமிழகத்தைச் சார்ந்த பாஜகவின் சீனியர் தலைவர்கள் ஒருவர் பெயர் கூட அந்தப் பட்டியலில் இல்லாத காரணத்தால் அதிருப்தி இருந்து வந்தது இந்த நிலையில் திருமதி வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் மகளிரணி தேசிய தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது அந்த கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.