ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் தொடர்பாக யாராலும் தெரிவித்துவிட முடியாது என்று பாஜக மூத்த தலைவர் இல கணேசன் தெரிவித்திருக்கின்றார்.
சென்னை கிண்டியில் இருக்கின்ற சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அந்த கட்சியின் மூத்த தலைவர் இல கணேசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், அந்தக் கட்சியின் மாநில துணைத்தலைவர் எம் என் ராஜா, தேசிய செயற்குழு உறுப்பினர் காளிதாஸ், ஆகியோர் பங்கேற்றனர் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்திய விடுதலைக்காக, நடைபெற்ற போராட்டத்தில் தலைமை தாங்கி வெற்றிகரமாக போராட்டம் நடத்திய காரணத்தால், சர்தார் என அழைக்கப்பட்டார் என தெரிவித்தார்.
அவர் மனதளவில் மிகவும் உறுதியான ஒருவர் காஷ்மீர் இந்தியாவுடன் அதே போல வருடம் தோறும் அவருடைய பிறந்த நாளில் மரியாதை செலுத்துவது வழக்கமான ஒன்றுதான் என்று தெரிவித்திருக்கிறார்.
பாஜக சார்பாக யாத்திரை நெடு நாட்களுக்கு முன்பாகவே திட்டமிட்ட ஒன்று திருமாவளவனை சார்ந்தவர்கள் கலவரம் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். ஆகவே இதற்கு அரசு சரியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த யாத்திரை கட்சி அமைப்பு ரீதியாக திட்டமிடப்பட்டு இருக்கின்றது என தெரிவித்தார். அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் திருமாவளவனை சார்ந்தவர்கள் பிரச்சனையில் ஈடுபட போகிறார்கள் என்று சூசகமாக தெரிவித்தார்.