கதறி அழுத சம்யுக்தா! என்ன நடந்தது பிக்பாஸ் வீட்டில்!

Photo of author

By Sakthi

கதறி அழுத சம்யுக்தா! என்ன நடந்தது பிக்பாஸ் வீட்டில்!

Sakthi

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முடிவுக்கு வர இருக்கும் நிலையில் அடுத்த கேப்டன் யார் என்பதை போட்டியாளர்கள் தேர்வு செய்து அவர்களுக்கு இடையே போட்டியோ , அல்லது அனைத்து போட்டியாளர்களும் நேரடியாகவோ கேப்டனை தேர்ந்தெடுக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றது.

இது சம்பந்தமாக ஏற்கனவே இன்றைய முதல் விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரு கோர்ட் சீனில் ஆரி ஒவ்வொருவருடைய தவறுகளையும் எடுத்து கூறியதால், மற்ற போட்டியாளர்களும் இவர் சிறந்த தலைமை என நினைத்து அவரை பலர் தலைவர் பதவிக்கு போட்டியிட நாமினேட் செய்ததை பார்க்க முடிந்தது.

இதனை அடுத்து இப்போது வெளியாகியுள்ள விளம்பரத்தில் ஆரி அந்த நீதிமன்ற அறையில் சத்தம் போட்டதை யாருமே தவறு என்று தெரிவிக்கவில்லை, எனவும் அனைவரும் அவர் நன்றாக பேசியதால் தான் ஆதரவு தெரிவித்ததாகவும், போட்டியாளர்களிடம் தெரிவித்திருக்கின்றார் சம்யுக்தா.

அதன் பிறகு தன்னை ஹவுஸ் மேட் அவமானப்படுத்தியதாக ஆஜித்திடம் கூறி கலங்கி இருக்கின்றார்.

அவர்களுக்கு கொஞ்சம் கூட நியாயம் எது என்று தெரியவில்லையா? என்று கேட்பதும் இரண்டாவது ப்ரோமோவில் வெளியாகி இருக்கின்றது.