சில் ட்ரம்ப் சில்! ட்ரம்பை கலாய்த்த ஸ்வீடன் சிறுமி!

0
137

11 மாதங்களுக்கு முன்பாக தன்னை கேலி செய்த அதிபர் டிரம்ப் ஐ பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரான சிறுமி கிரேடா தன்பெர்க், இப்போது கேலி செய்து இருக்கின்றார்.

ஸ்வீடன் நாட்டை சார்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேடா தன்பெர்க் ஐநாவில் சென்ற வருடம் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் கலந்துகொண்டு பருவநிலை மாற்றம் சம்பந்தமாக ஆவேசமாக உரையாற்றி இருக்கின்றார்.

பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கையில் உலகத்தலைவர்கள் மெத்தனம் காட்டி வருவதாக கடுமையாக சாடியிருக்கிறார் கிரேடாவின் இந்த பேச்சுக்கு உலக மக்களிடையே வரவேற்பு கிடைத்தாலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரை கேலி செய்யும் விதமாக ஒரு ட்விட் போட்டார்.

அந்த பதிவில் உன் கோபம் அபத்தமானது என்று குறிப்பிட்ட அவர் கோபத்தை குறைக்க பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

அதோடு பழைய படங்களை பார்த்து கோபத்தை கட்டுப்படுத்திக் கொள் என கூறி சில் கிரேடா என கேலி செய்து இருந்தார்.

அதிபர் டிரம்ப் பின் இந்த பதிவிற்கு அமைதி காத்த கிரேடா தன்பெர்க் இப்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிபர் டிரம்பை டேக் செய்து ஒரு ட்வீட்டை போட்டு இருக்கின்றார்.

தேர்தல் முடிவுகளில் குளறுபடிகள் இருக்கிறது என நீதிமன்றத்தை நாடி ட்ரம்ப் தேர்தல் முடிவுகளால் சோர்ந்து போய் இருக்கின்றார்.

இந்நிலையில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல கிரேடா தன்பெர்க்கின் இந்த ட்வீட் இருக்கின்றது.

அந்த ட்வீட்டில், டிரம்ப் பயன்படுத்திய அதே வார்த்தையை கிரேடா பயன்படுத்தி இருக்கின்றார்.

டிரம்ப் உங்களுடைய கோபம் அபத்தமானது எனவும் கோபத்தை குறைக்க பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றார் கிரேடா தன்பெர்க்.

Previous articleநாடகம் நடத்தும் அதிமுக அரசு! பொன்முடி கொந்தளிப்பு!
Next articleஅழகாய் இருக்கிறாய்! அதனால் பயமா இருக்கு! கணவன் செய்த செயல்!