அவங்க சொல்ற எல்லாத்தையும் நாங்க ஏத்துக்க முடியாது! ஆர். எஸ். பாரதி அதிரடி!

Photo of author

By Sakthi

7 பேர் விடுதலையில் திமுக தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றது எனவும் காங்கிரஸ் திமுக கூட்டணியில் உள்ளதாலேயே அந்த கட்சி தெரிவிக்கும் கொள்கை அனைத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்திருக்கின்றார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்துப் பேசிய ஆர் எஸ் பாரதி கோரிக்கை மனுவை கொடுத்தார் .

அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது சம்பந்தமாக, அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. எனவும் கூட்டத்தில் அரசியல் கட்சி முகவர்களின் துணையோடுதான் பெயர் நீக்கம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருப்பதாகவும் கூறியிருக்கின்றார்.

ஆனாலும் கரூர் மாவட்டத்தில் பல வார்டுகளில் வேண்டுமென்றே திமுக வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து அதிமுக வார்டு முகவர்கள் நீக்கியிருக்கிறார்கள், என்றும் குற்றம் சாட்டி இருக்கின்றார்.

இது போன்ற முறைகேடுகளை செய்வதற்காகவே கரூர் மாவட்ட ஆட்சியாளர் மாற்றப்பட்டதாகவும் ஆர் எஸ் பாரதி தெரிவித்தார்.

விரைவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில், ஆளும் தரப்பினர் தங்களுடைய வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார்கள், எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

7 பேர் விடுதலை சம்பந்தமாக கே எஸ் அழகிரி கூறிய கருத்து பற்றி கேள்வி எழுப்பியதற்கு பதில் கூறிய ஆர் எஸ் பாரதி திமுகவின் கருத்தை முன்னரே பதிவு செய்துவிட்டேன் எனவும் அரசியல் கூட்டணி வேறு கொள்கை கூட்டணி வேறு என்றும் 7 பேர் விடுதலையில் எங்களுடைய நிலைப்பாட்டை திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து விட்டார்.

காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறது என்ற காரணத்தால், அவர்கள் தெரிவிக்கும் அனைத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றார் ஆர் எஸ் பாரதி. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பது தெரிந்தேதான் திமுக அந்த 7 பேரின் விடுதலைக்காக வலியுறுத்தியதாகவும் ஆர் எஸ் பாரதி பதில் கூறியிருக்கின்றார்.