அவங்க தொல்லை தாங்க முடியல! கண்டன அறிக்கை வெளியிட்ட விஜயகாந்த்!

0
116

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் கொடுத்து வரும் தொந்தரவுகள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது.

மீனவர்களை விரட்டி அடிப்பதும் படகுகளை சேதப்படுத்துவது அவர்களின் மீது தாக்குதல் நடத்துவது வாடிக்கையாக இருந்துவருகிறது. அண்மைகாலமாக கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களின் 121 படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்து இருக்கின்றது.

அதோடு மட்டுமல்லாமல், படகுகளை அழிக்கவும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றது. இது தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த சம்பவத்திற்கு பாமக, திமுக, உள்பட பல கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை நீதி மன்றத்தின் உடைய இந்த தீர்ப்பிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார்.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இலங்கை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 121 படகுகளை அழிப்பதற்கு அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றது ,என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது.

தமிழக மீனவர்களுடைய படகுகளை அழிப்பதற்கு வழங்கிய இந்த தீர்ப்பு சரியானது இல்லை. மீனவர்களுடைய வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த நடவடிக்கை தேவையற்றது ஆகும்.

இருநாட்டு உடைய மீனவர்களுக்கு இடையில், தேவையில்லாத பதட்டத்தை ஏற்படுத்த இந்த செயல் வழிவகுக்கும் மேலும் படகுகளை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய மீனவர்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். இது இரு நாடுகளுடைய நட்பையும் கேள்விக்குறியாக்கும்.

ஆகவே இந்த விஷயத்தில் மத்திய ,மாநில அரசுகள் தலையிட்டு மீனவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் தமிழக மீனவர்களுடைய படகுகளை மீட்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கின்றார்.

Previous articleதமிழகத்தில் மெல்ல மெல்ல குறைந்து வரும் பாதிப்பு..!
Next articleபோக்குவரத்து தொழிலாளர்களின் திடீர் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! கடலூரில் பரபரப்பு!