இது யாருக்காக செய்யப்படுகிறது உள்நோக்கம் என்ன! பிரேமலதா சரமாரி கேள்வி!

0
137

வேல் யாத்திரையின் நோக்கம் என்ன கறுப்பர் கூட்டத்திற்காக யாத்திரை நடத்த படுகிறதா என்று திமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இருப்பதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளை, மூன்று மாதத்திற்குப் பின்னர் தான் திறக்க வேண்டும் தமிழக பாஜக சார்பாக வேல் யாத்திரை முன்னெடுக்கப்படுகின்றது.

அந்த யாத்திரையின் நோக்கம் என்ன? கருப்பர் கூட்டத்திற்காக இந்த யாத்திரை நடத்தப்படுகிறதா? என்ற கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதற்கு முன்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் பேட்டி அளித்தபோது, இப்போது தேர்தல் களத்தில் கருணாநிதியும் அல்ல ஜெயலலிதாவும் அல்ல களத்தில் இருக்கின்ற முதலமைச்சர் வேட்பாளர்கள் முதல் முறையாக நிற்கின்றன.

அவர்களுக்கு அனுபவம் இருந்தாலும் கூட இந்தத் தேர்தல் முதல் தேர்தல் தான்.

ஆகவே தேமுதிக ஏற்கனவே தேர்தலை சந்தித்து வருவதால் துணிச்சலுடன் செல்கிறது.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இருக்கின்றது. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை சட்டசபை தேர்தலை சந்திப்பது சம்பந்தமாக விஜயகாந்த் முடிவு எடுப்பார். எப்படி இருந்தாலும் சரி இந்த முறை பல இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார்.

Previous articleசூறாவளி பிரச்சாரத்திற்கு தயாரான டிடிவி தினகரன்! அதிர்ச்சியில் எதிர் தரப்பினர்!
Next articleஇன்று இவர்களுக்கு வெற்றி! இன்றைய ராசி பலன்கள்: 10-11-2020