ஈ வி எம்-ன் நம்பிக்கை குறித்து திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியிருக்கிறார். என்றால், பாரதிய ஜனதா வெற்றி பெறுகின்றது என்றுதான் அர்த்தம் என மத்தியபிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்திருக்கின்றார்.
மத்திய பிரதேசத்தில் காலியாக இருக்கும் 28 சட்டப்பேரவை தொகுதிக்கு கடந்த மூன்றாம் தேதி அன்று இடைத்தேர்தல் நடந்தது முடிந்திருக்கின்றது.
அதற்கடுத்த சில நாட்களிலேயே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திக்விஜய்சிங், வளர்ந்த நாடுகள் ஏன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது இல்லை? ஏனென்றால், அதனுடைய சீப்பை வைத்து ஹேக் செய்யலாம் என்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான நம்பகத்தன்மை சம்பந்தமாக சந்தேகம் எழுப்பி இருக்கின்றார்.
மத்தியபிரதேசத்தில் காலியாக இருக்கும் 28 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நேற்றைய தினம் நடைபெற்றது. பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக ஆட்சியை தக்க வைத்து இருக்கின்றது. நேற்று காலை முதலே பாஜகவின் முன்னிலை நிலவரம் சம்பந்தமாக அந்த கட்சியின் மூத்த தலைவரும் அந்த மாநில உள்துறை அமைச்சருமான நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், பாஜகவிற்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை இழக்கும் நபர்களிடம் நீங்கள் கேட்கவேண்டும் என்று தெரிவித்தார்.
இங்கே இருந்து மட்டுமே நாம் பெறுவோம் திக்விஜய் சிங்கின் அறிக்கையை பார்த்தேன், அவர் ஈவிஎம் சம்பந்தமாக கேள்வி கேட்டால், பாஜக வெற்றி பெறும் என்று அர்த்தம் தெளிவான பெரும்பான்மை பெறுவதற்கான வழியில் நாங்கள் சென்று கொண்டிருக்கின்றோம். காங்கிரஸ் கட்சியின் இரண்டு மூத்த குடிமக்கள்(கமல்நாத்,திக்விஜய் சிங்) டெல்லிக்கு மாற்றப்படுவார்கள் என்று தெரிவித்திருக்கின்றார்.