சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் குன்றக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன குன்றக்குடியில் ரேஷன் கடை திறப்பு விழாவின்போது திமுக சட்டமன்ற உறுப்பினரே பொதுமக்கள் முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் சின்ன குன்றக்குடியில் புதிய நியாய விலை கடை திறக்க வேண்டும் என பொதுமக்கள் அதிமுக செய்தி தொடர்பாளரும் மருது அழகுராஜ், மற்றும் கழக நிர்வாகிகளுக்கு, கோரிக்கை வைத்திருந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் ஜி. பாஸ்கரன் மாவட்ட ஆட்சியர் ஜெகநாதன் ஆகியோரின் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது.
அதன் விளைவாக ரேஷன் கடை திறப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அதன்பேரில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது.
அதில் குன்றக்குடி அடிகளார், மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது அங்கே வந்த சிவகங்கை மாவட்ட திமுக செயலாளரும், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான பெரிய கருப்பன் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த பொதுமக்களை தகாத வார்த்தைகளில் திட்டியதுடன் அறையை விட்டு வெளியில் செல்லுமாறு கூச்சலிட்டு தகராறு செய்து இ,ருக்கின்றார்.
அவருடைய இந்த நடவடிக்கையால், அதிர்ச்சிக்குள்ளான பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு, எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
சட்டமன்ற உறுப்பினர் கருப்பனுக்கு எதிராக முழக்கமிட்டு தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இதன் காரணமாக அதிர்ச்சிக்குள்ளான பெரியகருப்பன், மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அரசு விழாவில் தலையிட்டு தகராறு செய்த திமுக சட்டமன்ற உறுப்பினர் பொது மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தது திமுக வட்டாரத்தில் ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.