மோடியின் ஜாலம் இங்கே வேலை செய்யல அழகிரி கிண்டல்! எங்க தெரியுமா!

0
130

எதிர்காலத்தில் மதச்சார்பற்ற கூட்டணி ஒன்றாக இணைந்து வேலை செய்தால், வகுப்புவாத பாஜகவை வீழ்த்த இயலும் என்ற நம்பிக்கையை பீகார் மாநில தேர்தல் உறுதி செய்திருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருக்கின்றார்.

இதுபற்றி அவர் வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையில், அந்த மாநிலத்தில், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி, மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் வெளிவந்தன.

பதினைந்து வருட கால மக்கள் விரோத நிதிஷ்குமார் ஆட்சி முற்று பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள் ஆனாலும் தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக இருந்து விட்டது.

அந்த மாநில சட்டமன்றத் தேர்தலை பொறுத்த வரையில் தனிப் பெரும் கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்று இருக்கின்றது.

ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளின் எண்ணிக்கையை நெருங்குகிற வகையிலே பீகார் மக்கள் அந்த கட்சிக்கு வாக்களித்து இருக்கிறார்கள்.

பீகாரின் மதச்சார்பற்ற கட்சிகளின் வலிமை என்பது உறுதியாக இருக்கின்றது.

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில், மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றி வாய்ப்பை ஒவைசி கட்சி தடுத்து ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

இதன் மூலமாக, பாஜகவுக்கும், ஓவைசி கட்சிக்கும், ரகசியமான உடன்பாடு இருக்கும் என்கின்ற சந்தேகம் ஏற்பட்டு இருக்கின்றது.

எதிர்வரும் காலங்களில், சிறுபான்மை மக்களின் வாக்குகளை தனிமைப்படுத்தி அந்த கட்சிக்கு உதவுகின்ற ஓவைசி ,போன்ற கட்சிகளின் விஷயத்தில் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கின்றது.

பிஹார் மாநிலத்தில் பிரதமர் மோடியின் தீவிர பிரச்சாரத்தின் காரணமாக, பாரதிய ஜனதா, மற்றும் ஆர்ஜேடி, கூட்டணியை எவராலும் வெல்ல இயலாது என்ற பிம்பத்தை தேர்தல் முடிவுகள் தகர்த்து விட்டனர்.

எதிர்வரும் காலங்களில் மதச்சார்பற்ற கூட்டணி நல்ல ஒற்றுமையுடன் பணியாற்றினால், வகுப்புவாத அரசியல் செய்யும் பாஜகவை வீழ்த்த முடியும் என்ற ஒரு நம்பிக்கையை பீகார் மாநில தேர்தல் கொடுத்து இருக்கின்றது என்று கே எஸ் அழகிரி தெரிவித்திருக்கின்றார்.

Previous articleதூத்துக்குடி செல்லும் முதல்வர்! இந்த காரியத்தை செய்வாரா கனிமொழி கேள்வி!
Next articleஎன் புருஷன் வந்துட்டான்! இனி எதுவும் பண்ண முடியாது! திருப்பத்தூரில் நடந்த சோக சம்பவம்!