வைகோ சரமாரிக்கேள்வி! மத்திய அரசு அதிர்ச்சி!

0
123

மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி இருக்கின்றார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.

மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவு தேர்வை மாணவர்கள் மீது கட்டாயமாக திணித்த மத்திய அரசு அதற்கு தெரிவித்த காரணம் நாடு முழுவதும் பல நுழைவுத் தேர்வுகளை நடத்துவதால் மாணவர்களுக்கு மிகப் பெரிய சிரமம் ஏற்படுகின்றது என்ற காரணத்தால், அந்தச் சுமையை குறைக்கிறோம் என்று தெரிவித்திருந்தது. நீட் தேர்வு நடத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் சட்டம் நிறைவேற்றி அனுப்பிய அந்த முன் வடிவையும் பொருட்படுத்தாமல் நீட் கட்டாயம் என்ற விஷயத்தில் மத்திய அரசு விடாப்பிடியாக இருந்து வருகின்றது.

அதுபோல மாநில அரசுகள் மத்திய தொகுப்புக்கு அளித்துவரும் இளநிலை, மற்றும் முதுநிலை, மருத்துவப் படிப்புகள் பல் மருத்துவப் படிப்புகளில் இந்த வருடத்திலேயே தமிழநாட்டில் நடைமுறையில் இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அனுமதிக்க இயலாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மறுத்திருப்பது சமூகநீதி கோட்பாட்டிற்கு சமாதி கட்ட வைத்திருக்கின்றது. ஆனாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் 8 எய்ம்ஸ் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் பெங்களூரு நிம்ஹான்ஸ் உள்ளிட்ட 11 மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கின்றது.

மத்திய அரசினுடைய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 11 மருத்துவக்கல்வி நிறுவனங்களுக்கு பொதுவான நீட் தேர்வு பொருந்தாது. ஆகவே தேவையில்லை என்று முடிவெடுத்து இருக்கின்ற மத்திய அரசு மாநிலங்களில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு மட்டும் இந்த தேர்வை நடத்துவது எதற்காக மத்திய அரசின் மருத்துவ கல்லூரிகள் மட்டும்தான் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவையா தமிழ்நாட்டில் 355 ஆண்டுகளாக இயங்கி வரும் எம் எம் சி முக்கியத்துவம் இல்லாததா? மத்திய அரசின் அளவுகோல் என்ன ஆகவே இனி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை மொத்தமாக ரத்து செய்யவேண்டும் சமூகநீதிக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Previous articleதளபதியின் வலது கரம் செய்த அந்த செயலால் நொந்துபோன பத்மநாபன்! என்ன செய்தார் தெரியுமா!
Next articleபிரபல நடிகைக்கும் அவரது சகோதரிக்கும் போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர் – அந்த சகோதரிகள் யார் தெரியுமா?