லண்டனுக்குப் பறந்த ப்ளட் சாம்பிள்! என்ன ஆயிற்று ஸ்டாலினுக்கு திமுகவில் பரபரப்பு!

0
150

ஆண்டுக்கு ஒரு முறை லண்டன் சென்று மருத்துவ பரிசோதனை செய்து வந்தார் திமுக தலைவர் ஸ்டாலின் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் அங்கு செல்வதாக இருந்தது. ஆனாலும் கொரோனா தாக்கம் அப்போது வெளிநாடுகளில் மிக அதிகமாக இருந்த காரணத்தால், அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது.

அதன்பிறகு கடந்த ஜூன் மாதத்தில் லண்டன் செல்ல வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், ஆனால் பொது முடக்கம் அறிவித்ததால் சர்வதேச விமானங்கள் தடை செய்யப்பட்டு இருந்த காரணத்தால், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்ததாகவும், அதோடு தனி விமானம் மூலமாக லண்டன் செல்வதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்க பட்டதாகவும், தகவல் வெளியானது.தனிவிமானம் கேட்டு திமுக யாரையும் சிவாரிசு செய்யவில்லை என்றும் அந்த கட்சியின் சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

லண்டன் போகமுடியாத காரணத்தால், நடைப்பயிற்சி,மற்றும் உடல்பயிற்சிகளை தீவிரப்படுத்தினார் ஸ்டாலின். அதோடு வெளியூர் பயணங்களைத் தவிர்த்துவிட்டு, காணொளி மூலமாகவே கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றார்.

நோய்த்தொற்றின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், ஸ்டாலின் லண்டன் செல்ல இயலாததால் அவருடைய ரத்த மாதிரிகள் போன்றவைகள் சேகரிக்கப்பட்டு லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன என்றும், பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு இங்கு இருக்கும் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை கொடுப்பார்கள் என்றும், இப்போதைக்கு ஸ்டாலினுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. அவர் நலமுடன் இருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Previous articleதமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தீவிரம்! பணியினை பார்வையிடுவதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமித்தது தேர்தல் ஆணையம்!
Next articleஇந்து விரோத சக்திகளை நாசம் செய்வதற்காகவே இந்த யாத்திரை! எச் ராஜா விளாசல்!