பாஜக சார்பாக நடத்தப்படும் யாத்திரை இன்று சொன்னாலும் அதற்கு ஆள் சேர்க்கும் வேலையை அதிமுகவே செய்து கொண்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டி இருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேல்யாத்திரை என்ற பெயரில் பாரதிய ஜனதா நடத்தும் ட்ராமாவிற்கு ஆளும் கட்சியும் உறுதுணையாக இருக்கின்றதா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்ற எதிர்ப்பு உண்மைதான். ஆனாலும், தடையை மீறி யாத்திரை செல்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.
அந்த கட்சியின் சார்பாக யாத்திரை நடத்துவதற்கு அனுமதி தரப்படமாட்டாது. என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கின்றது. கொரோனா தொற்று காரணமாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அரசினுடைய துணிச்சலான நடவடிக்கை என்று மக்கள் பலரும் பாராட்டி இருக்கிறார்கள். ஆனாலும், தினம் ஒரு ஊரில் யாத்திரை என்ற பெயரில் பாஜகவினர் நாடகம் நடத்துவதையும் அங்கே ஒன்று கொடுப்பவர்கள் சிலரை கைது செய்து மாலையில் விடுவிப்பதை காணும் போது இது பாஜகவும், அதிமுகவும், இணைந்து ஆடும் நாடகமாகவே தெரிகின்றது.
தினமும் ஏதாவது ஒரு ஊரில் அந்தக் கட்சியின் மாநில தலைவர் தலைமையிலே பொதுக்கூட்டம் ஊர்வலம் என்று நடத்துகிறார்கள். அந்த கட்சியினரை கைது செய்து பின்பு மாலையில் விட்டு விடுவதால், அவர்கள் மீண்டும் இன்னொரு இடத்தில் அடுத்த நாள் போய் அதே நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். காவல்துறையினரின் தடை விதிப்பு எதற்க்காக ?அதே ஆட்கள் அடுத்தடுத்த தினங்களில் வெவ்வேறு இடங்களில் மீறி நடக்கும் போது அவர்களை ரிமைண்ட் செய்யாமல் விடுவிப்பது எதற்காக? ஏதோ ஒப்பிற்கு கைது செய்துவிட்டு மாலையிலே விடுவித்து விடுவது எதற்காக? அதேபோன்று மற்ற கட்சிகளும் போராட்டம் நடத்தும் போது காவல்துறை செய்யுமா? நாங்கள் அடிப்பதுபோல அடிக்கிறோம் நீங்கள் அவரைப்போல அழுங்கள் என்று தெரிவிப்பதாகவே தெரிகின்றது.
அந்த கட்சி யாத்திரையில் பங்கு பெறுபவர்கள் எவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை, முகக் கவசம் அணிவது கிடையாது. இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதன் மூலம் கொரோனா பரவுவதற்கு அதிமுக அரசு துணை போகிறது என்றுதான் நினைக்க தோன்றுகிறது.
அதோடு அந்த கட்சியின் யாத்திரைக்கு அதிமுகவினர் தான் கூட்டம் சேர்த்து கொடுக்கிறார்கள்.பணம் கொடுக்கப்பட்டு ஆண்களும், பெண்களும், அதிமுகவினராலே அனுப்பி வைக்கப்படுகிறார்கள். பாரதிய ஜனதா நடத்தும் யாத்திரை என்று வெளியில் சொல்லிக்கொண்டாலும் அதற்க்கு கூட்டம் சேர்ப்பது அதிமுக தான் என்பதை பொது மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதிலும், சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதிலும், உண்மையான அக்கறையோடு தமிழக அரசு இருந்தால் தடையை மீறி யாத்திரை நடத்துவோரை கைது செய்து ரிமாண்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என குறிப்பிடுகின்றார்.