அண்ணாமலை கைதா! யாத்திரையில் ஏற்பட்ட சம்பவத்தால் பரபரப்பு!

0
117

தமிழகத்தில் வெற்றிவேல் யாத்திரை நடத்துவதற்காக பாஜகவின் மாநில தலைவர் முருகன் திட்டமிட்டு இருக்கிறார். இந்த யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இருந்தாலும் அந்த தடையை மீறி மாவட்ட வாரியாக யாத்திரை நடைபெற்று வருகின்றது. அந்த யாத்திரையில் பங்கு பெறுபவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகிறார்கள். இந்நிலையில் நாமக்கல்லில் நடைபெற்ற யாத்திரையில் பாஜகவின் துணைத் தலைவர் விபி துரைசாமி ,மற்றும் அண்ணாமலை ,ஆகியோர் பங்குபெற்றனர்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் இனிமேல் கோ பேக் மோடி என்ற அரசியல் இருக்காது, இனி அந்த அரசியலை நாங்கள் செய்ய விடவும் மாட்டோம், பிரதமரை அவமானம் செய்யும் செயல் இதுவாகும். இந்த செயலுக்கு தங்களுடைய பதிலடி பலமாக இருக்கும். என்று தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் மாற்றம் வரவேண்டும் என்றால், எங்கள் கட்சியின் தொண்டர்கள் அடுத்த 7 மாதங்கள் தீவிரமாக பணியாற்றி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கொடுக்க வேண்டும். எதிர்வரும் தேர்தலில் பாஜகவிற்கும் போலி திராவிடத்திற்க்கும் தான் போட்டி என்று தெரிவித்திருக்கின்றார்.

Previous articleஆள் சேர்க்கும் அதிமுக! திருமாவளவன் கடும் தாக்கு!
Next articleசசிகலாவின் வழக்கறிஞர் தெரிவித்த அந்த முக்கிய தகவலால்! பீதியில் ஆளும் தரப்பு!