அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணையும் திமுகவின் மிக முக்கிய பிரமுகர்! ஆடிப்போன ஸ்டாலின்!

0
114

திமுகவில் விவசாய அணி செயலாளராக இருந்தவர் கேபி ராமலிங்கம். அதிமுகவில் இருந்தபோது 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் திமுகவில் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்திருக்கின்றார். தமிழ்நாட்டில் கொரோனா அதிகமாகி வந்த நேரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். அவருடைய இந்த பேச்சுக்கு கேபி ராமலிங்கம் எதிர்ப்பு தெரிவித்தார் அதோடு அவரை தீவிரமாக விமர்சனமும் செய்தார் இதனால் அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் கேபி ராமலிங்கம்.

அழகிரியின் ஆதரவாளராக இருந்து வந்த கேபி ராமலிங்கம் ஸ்டாலினை தொடர்ந்து பல இடங்களில் விமர்சித்து வந்திருக்கின்றார். இந்தநிலையில் உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித்ஷா இன்று மதியம் சென்னை வருகின்றார். அப்போது தமிழக தேர்தல் தொடர்பாக அவர் பாஜகவினர் உடன் ஆலோசனை நடத்த இருக்கின்றார். அதோடு நடிகர் ரஜினிகாந்த் அவர்களையும், அமித்ஷா சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேபோல கேபி இராமலிங்கம் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. அமித்ஷாவின் முன்னிலையில் பாஜகவில் கேபி ராமலிங்கம் இணைவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

Previous articleஉள்துறை அமைச்சரை வரவேற்பதற்காக அரசு சார்பிலும் பாஜக சார்பிலும் பிரம்மாண்ட ஏற்பாடு தயார்! விழாக்கோலம் பூண்ட தமிழகம்!
Next articleஸ்டாலின் கனவு பலிக்காது அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெற்றே தீரும்! முக்கிய நிர்வாகிகள் கருத்தால் உற்சாகமடைந்த தொண்டர்கள்!