ஸ்டாலின் கனவு பலிக்காது அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெற்றே தீரும்! முக்கிய நிர்வாகிகள் கருத்தால் உற்சாகமடைந்த தொண்டர்கள்!

0
178

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் கனவில் இருக்கின்றார். ஆனால் அவருடைய கனவு பலிக்காது என அதிமுகவின் இலக்கிய அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வளர்மதி தெரிவித்திருக்கின்றார்.

தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க வியூகங்களை அமைத்து வருகிறார்கள். எந்த கட்சியுடன் கூட்டணி சேர வேண்டும் என்பதற்கான வியூகமும் நடந்து வருகின்றன. இன்னொரு பக்கம் தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கின்றது. ஆக மொத்தத்தில் தமிழகத்தில் தேர்தல் களம் விருப்பிருப்படைந்து இருக்கின்றது அதிமுக நிர்வாகிகள் தீவிரமாக தேர்தல் வேலைகளை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு எஸ்பி கோவில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமை ஏற்றார். அதில் முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் இலக்கிய அணிச் செயலாளரும், மற்றும் மாவட்ட மண்டல பொறுப்பாளருமான ,வளர்மதி பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, போலி வாக்காளர்களை கண்டுபிடித்து அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான பணியில் முகவர்கள் ஈடுபட வேண்டும் அதோடு விடுபட்ட பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார் வளர்மதி.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தது போல அதிமுக இன்னும் நூறு வருடங்கள் நிலைத்து இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. சென்ற முறை நடைபெற்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி திமுக வெற்றி பெற்று விட்டது. ஆனால் இந்த முறை அந்த கட்சியை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை. ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற கனவில் மிதந்து கொண்டு இருக்கின்றார். அந்த கனவு நடைபெறவே நடைபெறாது போலி வாக்குறுதிகளை கொடுத்து ஓட்டுக்களை வாங்கிய திமுகவிற்கு தக்க பதிலடி கொடுப்பதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள. எதிர்வரும் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் மூன்றாவது முறையாக ஹாட்ரிக் சாதனைகளை படைக்கும் செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் அதிமுகவின் கோட்டை ஆக மாறும் என்று அவர் தெரிவித்தார்.

Previous articleஅமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணையும் திமுகவின் மிக முக்கிய பிரமுகர்! ஆடிப்போன ஸ்டாலின்!
Next articleஸ்டாலின் அறிவிப்பால் கதறும் எடப்பாடி! மகிழ்ச்சியில் திமுக தொண்டர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here