அமித்ஷா உடைய அரசியல் வியூகம் அமைப்பு சந்திப்புகள் அனைத்துமே இரவில் தான் நடக்கும். இரவில் ஆரம்பித்து அதிகாலை வரை ஆலோசனை செய்து முடிவு எடுத்து அதனை செயல்படுத்துவதற்காக ப்ளூ பிரிண்ட் போட்டு கொடுத்து விடுவார் அதோடு அதிகாலையில் தான் உறங்கச் செல்வார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. ஆனால் பிரதமர் மோடி அப்படி கிடையாது இரவில் சீக்கிரமாகவே தூங்கச் சென்று விட்டு அதிகாலை சீக்கிரம் எழுதிவிடுவார் அதிகபட்சமாக ரத்த அழுத்தம் சர்க்கரை என்று உடல் ரீதியாக பிரச்சனைகள் இருந்தாலும் கூட அவருக்கு இந்த இரவு ஆபரேஷன் மிகவும் பிடிக்கும்.
அதே பாணியில்தான் நவம்பர் மாதம் 21ஆம் தேதி சென்னையிலும் இரவு முழுவதும் தமிழக பாரதிய ஜனதா கட்சி சம்பந்தமான ஆலோசனைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் அமித்ஷா. அவருக்கு இரவு உணவிற்கு என்று தனியாக நேரம் ஒதுக்கும் பழக்கம் எல்லாம் இல்லை இரவு உணவு மேஜையின் மீது கூட அரசியல் ஆலோசனைகள் தான் அதிகமாக பகிரப்படும் என்று தெரிவிக்கிறார்கள்.
21ஆம் தேதி மாலை அரசு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு லீலா பேலஸ் சென்ற அவர் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர்களை சந்தித்து விட்டு அடுத்த கட்டமாக பாரதிய ஜனதாவின் மாவட்ட தலைவர்கள் மாநில நிர்வாகிகள் ஆகியோரின் கூட்டத்தை கூட்டினார்.
வரவேற்பு உரை, மாநிலத்தலைவர் உரை, என்று சில உரைகளுக்கு பின்னர் மாவட்ட தலைவர்கள் எழுந்து தமிழக பாரதிய ஜனதாவின் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்று ஒரு சில நிமிடங்கள் கருத்துக்களை கூற வேண்டும் என உத்தரவிட்டார் அமித்ஷா.
அப்போது முதலில் எழுந்த ஒரு மாவட்ட தலைவர் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் பிரதமர் மோடி அவர்களுக்கு உறுதுணையாக இருந்து செயலாற்றும் என தொடங்கி அமித்ஷாவை பற்றி புகழ்வதற்கு தொடங்க உடனே பி எல் சந்தோஷ் எழுந்துசென்று அதெல்லாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தானே உங்கள் புகழ்ச்சியை கேட்க அமித்ஷா இங்கே வரவில்லை கட்சி வளர்ச்சிக்கான விஷயங்கள் என்னவென்று தெரிவியுங்கள் என்று கூறினார்.
அதற்கடுத்து பேசிய சில மாவட்ட தலைவர்கள் தமிழகத்தில் பாஜக முன்னரை விட இப்போது வேகமாக வளர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் நாம் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடாமல் தனியாக நாமே ஒரு கூட்டணியை அமைக்க வேண்டும் அதிமுக ஆட்சியில் ஊழல் அதிகமாக இருப்பதாக மக்கள் நினைக்கின்றார்கள். மோடி அவர்களின் ஆட்சியில் ஊழலே இல்லை. இந்த நிலையில், நாம் ஊழல் ஆட்சியான அதிமுகவை ஆதரிக்க செய்யாமல் மூன்றாவது அணியை கொண்டு வரவேண்டும் என்றெல்லாம் பல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.
அந்தக் கருத்துக்கள் அனைத்திற்கும் பதிலளித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது, தமிழ்நாட்டில் பாஜக எப்படி இருக்கின்றது முன்பு எப்படி இருந்தது என்று எனக்கு தெரியும் அனைத்து தகவல்களும் எனக்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் நாம் மூன்றாவது அணி அமைந்தால் என்னவாகும் என்பது எனக்கு நன்றாக தெரியும். அதிமுக ஊழல் கட்சி என்று சொல்கிறீர்கள் இன்னொரு பெரிய கட்சியாக திமுக இருக்கின்றது. அப்படி என்றால் திமுக ஊழல் கட்சி கிடையாதா இன்று கேட்டிருக்கிறார் அமித்ஷா.
திமுகவின் ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருக்கும் கட்சிக்காரர்கள் அராஜகம் அதிகமாக இருக்கும் இவர்கள் ஆட்சியில் அப்படி கிடையாது. நமக்கு வேறு வழியும் இல்லை. அப்படி இருக்கையில், இனிமேல் தமிழக அரசையோ, அல்லது அதிமுகவையோ , விமர்சனம் செய்ய வேண்டாம் உங்களுக்கு கட்சி என்ன வேலை கொடுத்து இருக்கின்றதோ அதை மட்டும் செய்யுங்கள். நம் கட்சியில் உள்கட்சி பூசல் எப்படி இருக்கின்றது எத்தனை அணிகள் இருக்கிறது என்று எனக்கு தெரியும் அதையெல்லாம் விட்டுவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து பணிகளை செய்யுங்கள் என்று தெரிவித்தார் அமைச்சர் அமித்ஷா.
வரவிருக்கும் தேர்தலில் நாம் நிச்சயமாக சட்டமன்றத்திற்குள் செல்ல வேண்டும் அது நமக்கு மிகவும் முக்கியம். கூட்டணி தொடர்பாக வெளியிலேயோ, அல்லது பொது இடங்களிலேயோ ,சமூக வலைதளங்களிலேயோ, விமர்சனம் எதையும் வைக்க வேண்டாம். நம்முடைய வெற்றிகளை பாதிக்கும் எந்தக் கருத்தையும் வெளியிட வேண்டாம் கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி என்பதையெல்லாம் நாங்கள் முடிவு செய்து கொள்வோம். உங்களுடைய கருத்துக்களை பிரதமரிடமும், தேசியத்தலைவரிடமும் , தெரிவிக்கின்றேன். இனி அடிக்கடி இங்கே வருவேன் அப்போது அடுத்தடுத்த கட்ட நிலவரத்தைப் பற்றி ஆலோசிப்போம் என்று பேசி முடித்தார் அமித்ஷா.