திமுகவிற்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்த காரணத்தால் அவர் அதிமுகவுக்கும் செல்லப் போகின்றார் என பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தென் மண்டல பொறுப்பாளர் என்ற பதவியை கொடுத்து அவரை அமைதிப்படுத்தினார் கருணாநிதி.
சிறிது காலம் அமைதியாக இருந்த அழகிரி மறுபடியும் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார் திமுகவின் பொருளாதார அளவில் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்ததால் செல்வி மற்றும் கனிமொழி போன்ற குடும்ப உறுப்பினர்களும் சில திமுக மூத்த நிர்வாகிகளும் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தார்கள் ஆனால் அவர் சமாதானம் ஆகவில்லை.
கருணாநிதிக்கு அடுத்ததாக திமுக தன் பக்கம் வரவேண்டும் என்ற எண்ணத்தில் தான் அழகிரி காய் நகர்த்தி வந்தார். கருணாநிதி அதற்கு ஒத்து வராத காரணத்தால் திமுகவின் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தார் அழகிரி தேமுதிகவுடன் திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திய போது அது தெரிந்தும் விஜயகாந்தை கடுமையாக விமர்சனம் செய்த காரணத்தால் கருணாநிதி அழகிரி கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.
இந்த மோதலின் அச்சம் காரணமாக அழகிரியின் ஆதரவாளர்கள் தீவிரமாக இருந்ததால் ஸ்டாலின் மதுரை பக்கம் செல்வதே மிகவும் சிரமமாக இருந்தது என அப்போது பேச்சுக்கள் அடிபட்டன அம்மாவைப் பார்ப்பதற்காக வந்தேன் தெரிவித்தாலும் அழகிரி கோபாலபுரம் விழாவில் கலவரம் தானாம்.
அப்படித்தான் ஒருநாள் கோபாலபுரம் வந்த அழகிரி ஸ்டாலின் உடல்நிலை தொடர்பாக பேசிய அழகிரி மிரட்டல் விடுத்ததாகவும் அதன் காரணமாக அதிர்ந்துபோன கருணாநிதிக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகளும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் வந்து ஆறுதல் தெரிவித்தனர்.அதன் அடுத்த கட்டமாக 24-1-2014 அன்று தென் மண்டல பொறுப்பாளர் என்ற பதவியில் இருந்து அழகிரி நீக்கப்பட்டார்.
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார் இது தொடர்பாக அப்போது பேராசிரியர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் தங்கள் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதற்காக வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு சிலர் மதுரை மாவட்டத்தில் திமுக தோழர்கள் சிலர் மீது வீசி யாரேனும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை தவறாக பிரயோகித்து நடவடிக்கை எடுக்க துணை போகின்ற துரோகச் செயலில் ஈடுபட்ட சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது எனவும் இவ்வாறு துரோகச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
இவ்வாறு துரோகச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்து முறையற்ற விவாதங்களில் நேரடியாக ஈடுபடும் கழகச் செயல்வீரர்களை பணியாற்ற வேண்டாம் என்று தெரிவித்து குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்த தென்மண்டல கழக அமைப்புச் செயலாளர் மு க அழகிரி கழகத்தில் நீடிப்பது முறை கிடையாது என்ற காரணத்தாலும் அது கழகத்தின் கட்டுப்பாட்டில் மேலும் குறைத்து விடும் என்ற காரணத்தாலும் அவர் திமுகவின் உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று தெரிவித்திருந்தார்.
அதன் பிறகும் திமுகவை கைப்பற்ற அழகிரி முயற்சிகள் மேற்க்கொண்டதாக செய்திகள் பரவின ரஜினி கட்சி தொடங்கினால் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் அழகிரிதான் என்று பேச்சுகள் எழுந்து வந்தன.
அழகிரி வகித்து வந்த தென் மண்டல பொறுப்பாளர் என்ற பதவியை கனிமொழிக்கு கொடுக்க வேண்டும் எனவும் கட்சிக்குள் பேச்சுகள் எழுந்தன.
ஸ்டாலின் மீதான ஆத்திரத்தால் திமுகவின் தென்மண்டல ஓட்டுக்களை பிரித்து வந்த அழகிரி கருணாநிதி இருக்கும் வரை தான் திமுக கைகூடவில்லை எவ்வாறாவது ஸ்டாலின் காலத்திலாவது திமுகவில் தனக்கு ஒரு பெரிய பொறுப்பு கிடைக்கும் என்றுதான் சிறிது காலம் அமைதியாக இருந்து வந்ததாக அவருடைய ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதுவும் நடக்காமல் போன காரணத்தால் தன்னுடைய பதவிக்கு கனிமொழியின் பெயர் அடிபட்டதால் அழகிரி தனிக்கட்சி தொடங்க போகின்றார் பாஜகவில் இணைகிறார் என்ற பேச்சுக்கள் எழுந்தன.
ஆதரவாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவை முடிவை அறிவிப்பதாக அழகிரி தெரிவித்ததையடுத்து கடந்த இரண்டு முறை விட்டாச்சு இந்த முறையாவது கோட்டையைப் பிடித்து விட வேண்டும் என்று முயற்சி மேற்கொண்டு வந்தால் இடையில் சிக்கல் என நினைத்த திமுக மூத்த நிர்வாகி ஒருவர் திமுகவில் மீண்டும் இனைய சொல்லி அவரிடம் பேசி இருக்கின்றார். அந்த சமயம் அழகிரி வைத்த சில கோரிக்கைகளை முதலில் ஏற்க மறுத்தாலும் சூழ்நிலை காரணமாக ஸ்டாலின் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கிறார்கள் மதுரை மண்டலத்தினர்.